சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள ஆண்டியூர் கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   ஆண்டியூரில் (மணலகரம்) ஸ்ரீ தர்மாம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீ பத்மாவதி உடனுறை திருப்பதி வெங்கடேச பெருமாள், ஸ்ரீ சக்தி விநாயகர் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.
   இக்கோயிலில் குடமுழுக்கையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பணிகள் தொடங்கின. மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி, சனிக்கிழமை (மே.31) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு 4-ம் காலயாக பூஜை நடைபெற்றது.
   தொடர்ந்து, காலை 9.15 மணிக்கு கடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,
   காலை 9.30 முதல் 10 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
   தொடர்ந்து, காலை 10.30 முதல் 12 மணி வரை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், அடுத்து மூலவருக்கு மகா அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai