சுடச்சுட

    

    நீடாமங்கலம் நகரில்  கூடுதலாக போக்குவரத்து  காவலர்களை நியமிக்க  வலியுறுத்தல்

    By  நீடாமங்கலம்,  |   Published on : 02nd June 2014 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் நகரில் மூன்று இடங்களில் போக்குவரத்து காவலர்களை கூடுதலாக நியமித்து விபத்துக்களை தவிர்த்திட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
     நீடாமங்கலத்தில் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டம் தலைவர் என். கோவிந்தராஜன தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     செயலர் எம். அப்பாவு, பொருளாளர் கி. சேதுரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நீடாமங்கலத்தில் சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே, போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு அண்ணா சிலை பகுதி, கடைவீதி திருப்பம், ரயில்வே கேட் பகுதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை கூடுதலாக நியமித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். மேலும், நீடாமங்கலம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸார் இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai