சுடச்சுட

  

  பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வேண்டும்: ஆட்சியர்

  By  திருத்துறைப்பூண்டி,  |   Published on : 02nd June 2014 12:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் காலம்காலமாக சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய விதைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி. நடராஜன்.
   ஆதிரெங்கம் இயற்கை விவசாய ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நெல் திருவிழா கருத்தரங்கில் நிறைவுரையாற்றி அவர் மேலும் பேசியது:
   தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனக் கூறப்படும் காவிரி பாசன மாவட்டமான திருவாரூரில் பணியாற்றிய அனுபவத்தை என் வாழ்வின் பாக்கியமாக கருதுகிறேன்.
   வறட்சி, வெள்ளம் என இயற்கை சீற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டதை அறிந்து, வறட்சியை போக்க நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலம் கோடை சாகுபடி பருத்தி, நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
   இந்த நெல் திருவிழாவில் மாவட்ட அளவிலான விவசாயிகள் மட்டும் கலந்து கொள்வார்கள் என நினைத்தேன். ஆனால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
   பாரம்பரிய நெல் விதைகளை தாங்களே சொந்தமாக உற்பத்தி செய்து, பாரம்பரிய விதை நமது வாழ்க்கை முறையுடன் இணைந்தது என்பதை உணர்ந்து, அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில் பன்னாட்டு உணவு பகுபாய்வாளர் புதுதில்லியைச் சேர்ந்த தேவேந்திரசர்மா பேசியது:
   பாரம்பரிய நெல் விதைகளை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள் அடிப்படை விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும். விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பல்வேறு பணிகளுக்கும் தாரை வார்க்கப்படுவதால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விவசாயிகள் நகரங்களுக்கு புலம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
   நிகழ்ச்சிக்கு நுகர்வோர் ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாள் தலைவர் முனைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார்.
   நிகழ்ச்சியில் சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், 3,927 விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகளும் வழங்கப்பட்டன. மாவட்டஆட்சியர் சி. நடராஜனுக்கு மாவட்ட விவசாயிகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜெயராமன் செய்திருந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai