சுடச்சுட

    

    மக்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.
     குடவாசல் ஒன்றியம், மணப்பறவை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
     குடிநீர் விநியோகம், திறந்த நிலையில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
     மணப்பறவை ஊராட்சியில் 2014 -15-ம் ஆண்டில் தாய் திட்டத்தின் கீழ் 3 குடிநீர் வழங்கும் பணிகள் ரூ. 2.82 லட்சத்திலும், 2 தெருவிளக்கு அமைக்கும் பணிகள் 0.27 லட்சத்திலும், 1 சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ. 1.63 லட்சத்திலும், 3 தார்ச் சாலைகள் அமைக்கும் பணிகள் ரூ. 6.58 லட்சத்திலும், 3 கிராமங்களில் மயான மேம்பாட்டு பணிகள் ரூ. 8.70 லட்சத்திலும் மேற்கொள்ளப்பட உள்ளன.
     ஊராட்சி உபரி நிதியின் கீழ் 1 தார்ச்சாலை ரூ.3.43 லட்சம் மதிப்பீட்டிலும், 1 சிமெண்ட் சாலை ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டிலும், 1 மயான அணுகுசலையானது ரூ. 4.53 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
     பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 2.10 லட்சத்திலும், இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு ரூ. 1.20 லட்சத்திலும் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன.
     முதல்வரின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படடு வருகின்றன. மணப்பறவை ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய ரூ. 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டும். அவ்வாறு உபயோகிக்கும் பிளாஸ்டிக்கை மற்ற பொருள்களுடன் சேர்க்காமல் தனியே சேகரித்து மொத்தமாக, தண்டலை ஊராட்சியில் செயல்பட்டு வரும் மறுசுழற்சி பொருளாக தயாரிக்கும் நிலையத்திற்கு அனுப்ப வேண்டுமென்றார் நடராசன். திருவாரூர் கோட்டாட்சியர் பெ. பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai