சுடச்சுட

    

    மானியத்துடன் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

    By  திருவாரூர்  |   Published on : 02nd June 2014 12:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் மானியத்துடன் தொழில்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
     இதுகுறித்து மாவட்டத் தொழில் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
     உற்பத்தி தொழில்களுக்கு ரூ. 25 லட்சம் வரையும், சேவை சார்ந்த
     தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரையும் கடன் வழங்கப்படும்.
     விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட தேர்வுக் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். வியாபாரம், நேரடி விவசாயம் மற்றும் வாகனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.
     தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்கும்பட்சத்தில் 25 சதவீதம் மானியம், கிராமப் புறங்களில் தொழில் தொடங்கும் பட்சத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
     இதில் சொந்த முதலீடாக பொதுப்பிரிவினர் திட்ட முதலீட்டில் 10 சதவீதம், சிறப்பு பிரிவின ர் அனைவரும் திட்ட முதலீட்டில் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.
     18 வயது நிரம்பிய ஆண், பெண், சுயஉதவி குழுக்கள், 1860-ம் ஆண்டு கூட்டுறவு பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். உற்பத்தி தொழில்களுக்கு 10 லட்சத்துக்கு மேலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 5 லட்சத்துக்கு மேலும் கடன் பெற விரும்புவோர் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
     மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை 04366 224403 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai