சுடச்சுட

    

    முறைகேடு: நியாய விலைக் கடை ஊழியர் பணியிடை நீக்கம்

    By  திருவாரூர்,  |   Published on : 02nd June 2014 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் அருகே முறைகேட்டில் ஈடுபட்ட நியாய விலைக் கடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
     இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     "சங்க அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் அண்மையில் நீடாமங்கலம் பகுதி நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
     51 நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், ரூ. 37,155-க்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக காரக்கோட்டை நியாய விலைக் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
     தவிர 6 விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai