சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது மற்றும் சாராயம் விற்ற 14 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

  திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

  இதில் திருவாரூர் அருகே காப்பாணமங்கலத்தில் சசிகுமார் (33), கந்தன்குடி சோதனைச் சாவடி அருகே கும்பகோணம் கஜேந்திரன் (24), தமிழரசன் (26), வேலங்குடி சோதனைச் சாவடி அருகே கும்பகோணம் கண்ணன் (38), தோட்டாக்குடியை சேர்ந்த ராஜ்குமார் (42), ஆலிவலம் போலீஸார் நடத்திய சோதனையில் பொன்னிறை ராஜகோபால் (75). திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு போலீஸார் நடத்திய சோதனையில் கண்ணப்பேட்டை தெட்சிணாமூர்த்தி (42), ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த சோமு (47), பேரளம் போலீஸார் நடத்திய சோதனையில் குமாரமங்கலத்தில் சாராயம் விற்பனை செய்த தேவூர் மாசிலாமணி (53), மூர்த்தி (30), பில்லூர் பகுதியில் தேவூர் ஜெயபாரதி (26), கீரனூர் பகுதியில் தேவூர் பாஸ்கரன் (52), மற்றும் ராஜேந்திரன் (57), வீராசாமி (29) ஆகிய 14 பேரை கைது செய்து, 40 மதுபாட்டில்கள், 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai