சுடச்சுட

    

    கட்டுப்படியான விலை கோரி  திருவாரூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்

    By  திருவாரூர்,  |   Published on : 04th June 2014 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் பருத்தி விவசாயிகள் கட்டுப்படியான விலை வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     திருவாரூர் புறவழிச் சாலையில், வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை பருத்தி முறைமுக ஒப்பந்தப்புள்ளி மூலம் விற்பனை நடைபெற்றது. ஏலத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 2,000 டன் அளவிற்கு பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர்.
     ஒப்பந்தப்புள்ளியில் தனியார் பருத்தி வியாபாரிகள், அலுவலர்களுடன் கூட்டுசேர்ந்து மிகக் குறைந்த விலையை நிர்ணயம் செய்து அறிவித்தனராம்.
     இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள், பருத்திக்கு கட்டுப்படியான விலை அறிவிக்க வேண்டும், தனியார் பருத்தி வியாபாரிகள், அரசு அலுவலர்களின் கூட்டுச்சதியை கண்டிக்கிறோம் எனக் கூறி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், வட்டாட்சியர் அம்பிகாபதி உள்ளிட்டோர் அங்கு வந்து விவசாயிகளுடன் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
     பின்னர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன், அலுவலர்களைக் கண்டித்தும், பருத்திக்கு கட்டுப்படியான விலையை அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருத்தியை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதையடுத்து விவசாயிகளுடன் தொடர்புடைய அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai