சுடச்சுட

    

    நாட்டு மக்களை நேசிப்பவர்களுக்கே தேர்தலில் வெற்றி:  அமைச்சர் ஆர். காமராஜ் பேச்சு

    By  நீடாமங்கலம்  |   Published on : 04th June 2014 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டு மக்களை நேசிப்பவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்றார் அதிமுக திருவாரூர் மாவட்டச் செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான ஆர். காமராஜ்.
     திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் தமிழக அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை விளக்கியும், மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்தும் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: மூன்றாண்டுகால ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளுக்காக கிடைத்த பரிசுதான் மக்களவைத் தேர்தல் வெற்றி. மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்தான் ஸ்டார் வேட்பாளர்கள். நேரு காலத்தில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மன்னார்குடி, கோட்டூர் அருகேயுள்ள கும்முட்டித்திடல் சந்தானம்தான் இப்பகுதியில் ரயில்வே வழித்தடத்தை ஏற்படுத்தியவர். இதை இப்பகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.
     திமுக ஆட்சிக்காலத்தில்தான் மன்னார்குடி ரயில் வழித்தடம் நிறுத்தப்பட்டது. திமுகவினர் எந்த காரியத்தைச் செய்தாலும் உள் நோக்கத்துடன்தான் செய்வார்கள். நாட்டு மக்களை நேசிப்பவர்களுக்குத்தான் தேர்தலில் வெற்றி கிடைக்கும். மக்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு தோல்விதான் கிடைக்கும். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக. எல்லாத் தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவி ஜெயலலிதாதான். சாதியை முன்னிறுத்தி யாரும் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்றார் அவர்.
     கூட்டத்திற்கு நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் எம்.எஸ். சங்கர் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் மணலூர் ஆர். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் இளவரசி இளையராஜா, பேரூராட்சித் தலைவர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் சோம. ஜெயபால், மாவட்ட சத்துணவு ஊழியர் நலச் சங்கத் தலைவர் ஆர். அன்பழகன், ஒன்றிய துணைச் செயலாளர் வனிதா உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     நகரச் செயலாளர் இ. ஷாஜஹான் வரவேற்றார். தலைமை நிலையப் பேச்சாளர் காரை செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் கோ. அரிகிருஷ்ணன், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் பொன். வாசுகிராம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே. லோகநாதன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். நகர இளைஞரணி செயலாளர் சி. சிவமணி நன்றி கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai