Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் கூடுதல் போக்குவரத்து போலீஸார்: எஸ்.பிக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் கூடுதல் போக்குவரத்து போலீஸார்: எஸ்.பிக்கு பாராட்டு

    By  நீடாமங்கலம்,  |   Published on : 04th June 2014 10:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் கூடுதலாக போக்குவரத்துக் காவலரை நியமித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
     நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள பகுதியாகும். இதனால், அடிக்கடி விபத்துக்கள் நேரிட்டு வந்தன. இதைத் தவிர்க்கும் பொருட்டு, கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமிக்க நுகர்வோர் பாதுகாப்புக் குழுவினர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
     இதை ஏற்று, நீடாமங்கலம் நகரில் ஏற்கெனவே ஒரேயொரு போக்குவரத்துக் காவலர் மட்டுமே பணியாற்றியதைக் கவனத்தில் கொண்டு, மேலும் ஒரு போக்குவரத்துக் காவலர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாருக்கு நீடாமங்கலம் நுகர்வோர் பாதுகாப்புக் குழுவினரும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
     மேலும், ஒரு காவலரை நியமிக்கவும், போக்குவரத்துக் காவலர்களுக்கு நிழற்குடை அமைத்துத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் காவல் கண்காணிப்பாளரை கேட்டுக் கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai