சுடச்சுட

  

  பருத்தி விவசாயிகள் ஏலத்தில்  பங்கேற்று பயன்பெற அழைப்பு

  By  திருவாரூர்,  |   Published on : 04th June 2014 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகள், பருத்தி ஏலத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என பருத்தி விற்பனைக்குழு தனி அலுவலர் மனோகரன், செயலர் பாலச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
   இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கும், திருவாரூரில் மாலை 4 மணிக்கும், வலங்கைமானில் புதன்கிழமை மாலை 4 மணிக்கும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. விவசாயிகள் தங்களுடைய பருத்தியை நன்கு உலர வைத்து, தரம் பிரித்து ஏலம் நடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.
   மேலும் விவரங்களுக்கு குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை 97876 50825, திருவாரூர் விற்பனைக் கூடத்தை 91594 31956, வலங்கைமான் விற்பனைக் கூடத்தை 97876 50825 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai