சுடச்சுட

  

  ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தல்

  By திருவாரூர்  |   Published on : 05th June 2014 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள் அரசின் சட்ட விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார்.

  திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள், கிணறு தோண்டுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:

  அண்மைக்காலமாக ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்து குழந்தைகள் பலியாகும் நிகழ்வு தொடர்கிறது. இதைத் தடுக்கும் வகையில் ஆழ்துளை கிணறு உரிமையாளர்கள், கிணறு தோண்டுகிறவர்கள் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

  கிணறு தோண்டும் நில உரிமையாளர் 15 நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர், நிலத்தடி நீர்வாரியம் மற்றும் கிராமப் பஞ்சாயத்திடம் தகவல் தெரிவித்து முறையான அனுமதி பெற வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டும் நிறுவனங்கள் அவசியம் மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும். கிணறு தோண்டும் இடம் அருகில் நிறுவனத்தின் முகவரி, நில உரிமையாளர் முகவரியை எழுதி வைக்க வேண்டும்.

  கிணற்றை ச்சுற்றி கம்பி வேலி அல்லது தக்க பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும். கிணற்றின் மேல்பகுதியில் இரும்புத் தகட்டை வைத்து நன்றாக மூடவேண்டும். கிணறு தோண்டியபின் சுற்றி தோண்டிய பள்ளங்களை மூடவேண்டும். ஏதேனும் காரணங்களுக்காக ஆழ்துளை கிணறு மூடாமல் இருந்தால் காரணத்தைக் குறிப்பிட்டு உரிய அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும். மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் காளிராஜ் மகேஷ்குமார். கூட்டத்தில், தஞ்சாவூர், திருவாரூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், திருவாரூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆழ்துளை கிணறு தோண்டும் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai