Enable Javscript for better performance
தடுப்பணை அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    விஷ்ணுபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கித் தடுப்பணையை புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் ஆய்வு செய்தார்.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், விஷ்ணுபுரத்தில் ரூ. 6.30 லட்சத்தில் நீர்மூழ்கி தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியை ஆட்சியர் சி. நடராசன் ஆய்வு செய்தார்.

    அப்போது, திருவாரூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெளóள காலங்களில் கடலில் சென்று சேரும் நீரை (தரைக்குள் ஒரு தடாகம்) நீர்மூழ்கி தடுப்பணை அமைப்பதன் மூலம் அணையின் பின்புறம் சுமார் 3 முதல் 5 கி.மீ. நீளத்திற்கு மணலுக்கடியில் நீர் சேகரிக்கப்படுகிறது. மேலும் அணைக்கு பின்பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு மழை நீரானது களிமண் பரப்பிற்கு அடியில் உள்ள மணல் பரப்பிற்கு கொண்டு செல்லப்பட்டு அப்பகுதியின் நீர்மட்டம் உயர வழிவகுக்கிறது. விஷ்ணுபுரம் ஊராட்சியில் அமைக்கப்படும் நீர்மூழ்கி தடுப்பணைக்காக அரசலாற்றின் குறுக்கே 60 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலம், 4 மீட்டர் உயரத்திற்கு மணல் அகற்றப் பட்டு பாலித்தின் தார்ப்பாய் விரிக்கப்பட்டு அதன் மீது 48 மீட்டர் நீளத்திற்கும், அடிப் பரப்பில் 3.5 மீட்டர் அகலம் தொடங்கி 2 மீட்டர் அளவிற்கு, 3.7 மீட்டர் உயரத்திற்கு மணல் மூட்டைகளால் அடுக்கப்படுகின்றது.

    இதற்காக 27,000 மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு அடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிவடைந்ததும் அகற்றப்பட்ட மணலானது இந்த தடுப்பணை அமைப்பின் மீது பொக்லைன் இயந்திரங்கள் மூலம் போட்டு மூடப்படும் என்றார் நடராசன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai