சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்ற 8 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

  திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் உள்ள போலீஸார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

  அப்போது திருவாரூர் அருகே மகாராஜபுரத்தில் சாராயம் விற்ற பெரியசாமி (60), வீரையன் (27) ஆகிய இருவரையும் கைது அவர்களிடமிருந்து 220 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

  தவிர, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புலிவலம் நிலவாணன் (45), தம்பிக் கோட்டை கிழக்குப் பகுதியில் பெருமாள்செல்வம் (46), விளாங்குடி மதுபானக் கடை அருகே தியாகேசன் (32), கந்தங்குடி சோதனைச்சாவடி அருகே கடம்பங்குடி மணிகண்டன் (59), காரனூர் பாளையத்தைச் சேர்ந்த மலையப்பன் (32), வேலங்குடி சோதனைச் சாவடி அருகில் ஆடுதுறை வடிவேல் (35) ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai