சுடச்சுட

    

    காரைக்காலில் சாத்துக்குடி விலை கடும் உயர்வு

    By காரைக்கால்,  |   Published on : 06th June 2014 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் சாத்துக்குடி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    சுப நிகழ்ச்சிகளின் பயன்பாட்டிற்கு சாத்துக்குடி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தாம்பூலப் பையில் தேங்காய் மற்றும் இப்பழம் போடும் வழக்கம் மக்களிடையே உள்ளது. வெயில் காலத்தில் சாத்துக்குடி சாறு அருந்துவோரும் அதிகமாக உள்ளனர். இப்பழத்தை சாறு பிழிந்து விற்கும் சாலையோர விற்பனையகம் பல உள்ளன. இவர்கள் பழ மண்டியில் சாத்துக்குடிகளை மூட்டையாக வாங்கிவந்து காலையிலேயே வியாபாரத்தை தொடங்குகின்றனர்.

    சாத்துக்குடியின் விலை தற்போது இரு மடங்காக உயர்ந்திருப்பது பயன்பாட்டாளர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்காலை பொருத்தவரை காய், கனி, மலர்கள் யாவும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்தே சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. காரைக்காலுக்கு வரும் சாத்துக்குடியை பொருத்தவரை சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தே கொண்டுவரப்படுகிறது. சாத்துக்குடி 25 கிலோ மூட்டை முன்பு ரூ. 600 என்றிருந்தது. தற்போது ரூ. 1400 என்ற அளவிற்கு கடுமையாக உயர்ந்திருக்கிறது. சென்னையிலும் இதே விலைதான் விற்பனை நடப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    சாத்துக்குடி உற்பத்தி கடும் வெயிலால் வெகுவாக குறைந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விலையை கூடுதலாக விற்பதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்குமென மொத்த வியாபாரிகள் ஒருங்கிணைந்து இந்த முடிவை எடுத்திருக்கலாமென பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai