சுடச்சுட

  

  கோயில் இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

  By திருவாரூர்,  |   Published on : 06th June 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட் டில் உள்ள கோயில்களில் இரவுக் காவலர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரவுக் காவலர் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் ஓய்வூதியப் புத்தகம் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்குரிய ஆளறி அட்டை, பணி விடுப்புச் சான்று ஆகியவற்றுடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை நேரில் கொடுக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிப்பவர்கள் மட்டுமே நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்டு பணி வழங்கப்படும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai