சுடச்சுட

  

  திருவாரூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மூன்று பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜ்குமார் வியாழக்கிழமை அடியக்கமங்கலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடியக்கமங்கலம் பேருந்து நிலையம் அருகே பாத்திமா என்பவரது நிலத்தில் உரிய அனுமதியின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்த திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவர் கைது செய்யப்பட்டு, ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

  இதேபோல, அதே பகுதியில் வைப்பூர் காவல் சரகம் பொச்சக்குடியைக்குடியைச் சேர்ந்த செல்வம் (40), அடியக்கமங்கலம் ஜலால் (43) ஆகியோர் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றது, தெரியவந்து இருவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai