சுடச்சுட

    

    ஏடிஎம் மைய கண்ணாடிகளில் உள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும்

    By திருவாரூர்,  |   Published on : 07th June 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏடிஎம் (தானியங்கி பண சேவை) அறை கண்ணாடி கதவுகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற தொடர்புடைய வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார்.

    திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏடிஎம் பாதுகாப்பு குறித்த வங்கியாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:

    தமிழகத்தில் ஏடிஎம் மையங்களில் தொடரும் திருட்டு சம்பவங்களை அடுத்து

    ஏடிஎம் மையங்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏடிஎம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு வசதி சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் பொருத்த வேண்டும்.

    பகல் மற்றும் இரவு நேரப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ஏடிஎம் அறைக் கண்ணாடிக் கதவுகளில் உள்ளே இருக்கும் நபர் தெரியாத வகையில் வங்கி நிர்வாகம் ஒட்டியுள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும். இளம்

    வயதினரை பாதுகாவலர்களாக நியமிக்க வேண்டும்.

    ஏடிஎம் மையத்துக்குள் அருகிலுள்ள காவல் நிலையம், மருத்துவமனை, தீயணைப்புத்துறை மற்றும் தொடர்புடைய காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் ஆகியோரின் கைப்பேசி எண்களை மக்கள் பார்வைக்கு தெரியும்படி தாளில் அச்சடித்து ஒட்டி வைப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் காளிராஜ் மகேஷ்குமார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai