சுடச்சுட

    

    இரு சக்கர வாகனம், நகை திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு காவல்நிலைய போலீஸார் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லையாம். விசாரணையில் அவர் பூம்புகார் பகுதி வானகிரியை சேர்ந்த ஜெகதீசன் (25) என்பதும், அவர் ஓட்டி வந்த வாகனம் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், நல்லாத்தூர், புத்தக்குடி பகுதியில் அண்மையில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடியதையும், மேலும் நெடுங்காட்டில் ரூபா என்பவரது வீட்டில் 3 பவுன் நகைகளை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அடகு வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும், தங்க நகைகளையும் போலீஸார் மீட்டனர். ஜெகதீசன் மீது வழக்குப் பதிந்த போலீஸார் அவரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நீதிபதி ஜெயந்தி முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai