சுடச்சுட

    

    பருத்திக்கு கட்டுப்படியான விலை வழங்க வலியுறுத்தல்

    By திருவாரூர்,  |   Published on : 07th June 2014 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்திலுள்ள பருத்தி விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை வழங்கி அவர்களைக் காக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் மாசிலாமணி முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

    விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வரும் பருத்தியை தர நிர்ணயம் செய்து முத்திரையிட்ட பின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பஞ்சாலைகள் நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்யும் வகையில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருத்தி விவசாயிகள் பாதிக்காத வகையில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தப்பட்ச ஆதரவு விலையை கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai