சுடச்சுட

    

    "மழைநீர் வடிகால்களில் பிளாஸ்டிக், குப்பைகள் போடுவதை தவிர்க்க வேண்டும்'

    By திருவாரூர்,  |   Published on : 07th June 2014 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்திலுள்ள மழைநீர் வடிகால்களில் குப்பைகளையும், பிளாஸ்டிக் பொருள்களையும் போடுவதை தவிர்க்க வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.

    திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் பயிற்சி முகாமில் அவர் மேலும் பேசியது:

    நீராதாரங்களான குளம், குட்டைகள் மற்றம் ஊருணிகளை மக்கள் பங்கேற்புடன் புனரமைக்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு அமைக்கப்படாமலிருந்தால் உடனடியாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நிறுவ வேண்டும்.

    மாவட்டத்திலுள்ள பாசன ஆறுகளில் தரை மட்ட தடுப்பணைகள், ஆறு மற்றும் குளங்களில் ஆழ்குழாய் அமைத்து மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை ஆழ்குழாய் மூலம் நிலத்தடி நீர்செறிவூட்டும் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் மற்றும் விளம்பரங்கள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மக்கள் தங்களது இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் உள்ள அடைப்புகள் மற்றும் பழுதுகளை சரிசெய்து, மழைநீரை முழுமையாக சேகரிக்க முயற்சிக்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் குப்பைகள், பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகளை போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிநீர் குழாயை திறந்த நிலையில் வைத்து குளிப்பது, துணி துவைப்பது, பாத்திரங் களை கழுவுவது, மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டுதல் கூடாது என்றார் ஆட்சியர்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் மு. ராமநாதன், உதவி நில நீர் வல்லுநர் சி. லெட்சுமணன், உதவி நிர்வாகப் பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai