Enable Javscript for better performance
நன்னிலத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    நன்னிலத்தில் வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    நன்னிலம் அருகே திருக்கண்டீஸ்வரத்தைச் சேர்ந்த வீராச்சாமி மகன் செந்தில் குமார் (32). கடந்த சில மாதங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை காலை தெரிய வந்தது. நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    மற்றொருவர் தற்கொலை: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே காவனூரைச் சேர்ந்தவர் மேரி (எ) இலக்கியா (24). வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் வியாழக்கிழமை விஷம் குடித்துள்ளார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai