Enable Javscript for better performance
ரயிலில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் ஒப்படைத்த போலீஸார்!- Dinamani

சுடச்சுட

    

    ரயிலில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் ஒப்படைத்த போலீஸார்!

    By திருவாரூர்,  |   Published on : 08th June 2014 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயிலில் பயணி தவறவிட்ட பை, ரூ. 8 ஆயிரத்தை திருவாரூர் ரயில்வே போலீஸார் மீட்டு அந்த பயணியிடம் ஒப்படைத்தனர்.

    ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவதாஸ் பிரகாஷ்ராவ் மகன் சூரிய பிரகாஷ்ராவ் (28). இவர் குடும்பத்தினருடன் கடந்த 3-ம் தேதி சென்னையிலிருந்து சென்னை-காரைக்கால் விரைவு ரயிலில் வேளாங்கண்ணிக்கு வந்தார். வழிபாட்டுக்கு பிறகு புதன்கிழமை காரைக்கால்-சென்னை விரைவு ரயிலில் சென்னைக்கு புறப்பட இருந்தார்.

    ஆனால், நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும்போது பயண இருக்கை உறுதி செய்யப்படாததால் அவசரத்தில் ரயிலிலேயே பையை விட்டுவிட்டு ரயிலிலிருந்து இறங்கிவிட்டார். ரயிலும் சென்றுவிட்டது. சூரியபிரகாஷ்ராவ் பேருந்தில் சென்னை சென்று, ஆந்திரத்துக்கு சென்றுள்ளார்.

    இதனிடையே, திருவாரூர் வந்த காரைக்கால்-சென்னை விரைவு ரயிலை

    சார்பு ஆய்வாளர் செந்தாமரை, தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுகுமார், தலைமைக் காவலர்கள் ஜவான், ஜெகதீசன், யூசுப், காளிதாஸ் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது, கேட்பாரற்ற நிலையில் ஒரு பை இருந்தது தெரிய வந்தது. பையை சோதனை செய்தபோது, சூரியபிரகாஷ்ராவின் முகவரி, தொலைபேசி எண் இருந்தது.

    இதையடுத்து, அவருக்கு தகவல் கொடுத்து திருவாரூர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து பை மற்றும் அதிலிருந்த ரூ. 8 ஆயிரம் ரொக்கத்தை ஆய்வாளர் செந்தாமரை ஒப்படைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai