சுடச்சுட

    

    கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த தலைமைக் காவலர் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    திருவாரூர் அருகே மேப்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (46). இவர் கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். மே 18-ம் தேதி கூத்தாநல்லூரிலிருந்து திருவாரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். லட்சமாங்குடி பகுதியில் வந்தபோது நிலைத் தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai