Enable Javscript for better performance
அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய நடவடிக்கை

    By திருவாரூர்,  |   Published on : 09th June 2014 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும் மக்களை முழுமையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் திருவாரூர் மாவட்ட புதிய ஆட்சியராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற டாக்டர் எம். மதிவாணன்.

    திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சி. நடராசன் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அதே துறையில் பணியாற்றிய டாக்டர் எம். மதிவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

    புதிய ஆட்சியர் டாக்டர் எம். மதிவாணன் ஞாயிற்றுக்கிழமை, தாற்காலிக ஆட்சியராக பொறுப்பு வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறனிடமிருந்து ஆட்சியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டி:

    தமிழக அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    கடந்த 2013-2014-ம் ஆண்டில் ரூ. 3.25 கோடியில் 81 தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. 2014-2015-ம் ஆண்டில் 53 தூர்வாரும் பணிகள் ரூ. 2.41 கோடியில் நடைபெற்று வருகின்றன என்றார் மதிவாணன்.

    1997-ல் உதவி ஆட்சியர், 2004-2005-ல் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர், 2005 ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்று கூடுதல் ஆணையராக (சர்க்கரை) பொறுப்பு வகித்தார். 3.6.2011 முதல் 30.9.2012 வரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து சென்னையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநர் பணி, தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார் எம். மதிவாணன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai