சுடச்சுட

  

  எதிர்ப்பை கைவிடஇந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

  By காரைக்கால்,  |   Published on : 09th June 2014 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகள் தங்களது எதிர்ப்பை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

  இதுகுறித்து புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினர் பி. தங்கராசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

  புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை கொண்டு வரப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

  ஆனால், இந்த திட்டத்தை எதிர்த்து சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் அறிக்கைவிட்டு வருகின்றன. இவ்வாறு அறிக்கை விடுவோரின் குழந்தைகள் எத்தனைபேர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். புதுவை அரசு, குழு அமைத்து ஆராய்ந்த பின்னரே சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் புதுவைக்கு உகந்தது என அறிவிப்பு செய்துள்ளது. இதன்மூலம் ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறப் போகிறார்கள். இதை மறந்து எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல திட்டத்தை எதிர்ப்பதை அரசியல் கட்சிகள், அமைப்பினர் கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai