Enable Javscript for better performance
அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய 2 பேர் கைது

    By திருவாரூர்,  |   Published on : 10th June 2014 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. திருவாரூர் வழியாக மயிலாடுதுறை சாலை புதுத்தெரு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த அதேப் பகுதியைச் சேர்ந்த ஆருத்தன் (45), அவரது மகன் கணேஷ் ஆகிய இருவரும் பேருந்தை மறித்து ஆட்டோவுக்கு வழிவிடாதது குறித்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினார்களாம்.

    இதுகுறித்து பேருந்து நடத்துநர் அசோகன், திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆருத்தன், கணேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai