Enable Javscript for better performance
கமலாலயக் குளக்கரையில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் தியாகராஜர் கோயில் அருகே இடிந்து விழுந்த கமலாலயக் குளக்கரையில் ஆட்சியர் எம். மதிவாணன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    இதன்மூலம், புதிய ஆட்சியர் வந்த பிறகாவது குளக்கரை சீரமைக்கப்படலாம் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    கமலாலயக் குளத்தின் வடக்கு கரை மழையின் ஈரத்தால் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் 150 மீட்டர் அளவுக்கு இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து சில நாள்களில் 50 மீட்டருக்கு 2-வது முறையாக கரை இடிந்து விழுந்தது. பல்வேறு காரணங்களால் குளக்கரை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், புதிதாக ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள எம். மதிவாணன் திங்கள்கி ழமை கமலாலயக் குளக்கரையை ஆய்வு செய்து, இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், நகராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் உமா மகேஷ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai