சுடச்சுட

    

    காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

    By காரைக்கால்,  |   Published on : 10th June 2014 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா தொடக்கமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

    இறைதூதரில் சிறப்பிடம் பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாவின் நினைவாக காரைக்காலில் தர்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடத்தப்படுகிறது. இதன்படி, நிகழாண்டு 191-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக, கண்ணாடி ரதம், பல்லக்குகள் வீதிகளில்  ஊர்வலமாக வந்து இரவு தர்காவை வந்தடைந்தன. இதன் பின்னர் சிறப்பு துஆ செய்யப்பட்டு பிரதான கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தர்கா, பள்ளிவாசலில் உள்ள பல மினராக்களிலும் கொடியேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் லெ. முகமது மன்சூர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொ) வம்சீதரரெட்டி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், காரைக்கால் நகரமைப்புக் குழுமத் தலைவர் கே.கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai