Enable Javscript for better performance
கோயில் வாசலில் முதியவர் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே அம்மையப்பனில் கோயில் வாசலில் முதியவர் சடலம் கிடந்தது திங்கள்கிழமை தெரிய வந்தது. 

    அம்மையப்பன் பெருமாள் கோயில் வாசலில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தது குறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனுக்கு தெரிவிக்கப்பட்டது.  இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸாருக்கு அவர் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்தில் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai