சுடச்சுட

    

    கொரடாச்சேரி அருகே சிவன் கோயிலில் இருந்த 5 கற்சிலைகள் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே கமுகக்குடியில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், கோயில் அருகில் சிறிய கொட்டகை அமைக்கப்பட்டு அங்கு கோயிலில் இருந்த சவுந்திரநாயகி அம்மன், பிரம்மா, முருகன், அர்த்தநாரீஸ்வர், நந்தி ஆகிய கற்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், அந்த சிலைகள் காணால் போனது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பணி செய்பவர்கள் கோயில் செயல் அலுவலர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். முருகன் அளித்த புகாரின் பேரில், கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். காணாமல்போன சிலைகள் ஒவ்வொன்றும் சுமார் ஒன்றரை அடி முதல் இரண்டரை அடி வரையிலான உயரம் கொண்டவை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai