சுடச்சுட

    

    திருவாரூர், நாகையில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

    By திருவாரூர்  |   Published on : 10th June 2014 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ. 1.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 209 பேர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    கூட்டத்தில், பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோர் நலத் துறை சார்பில், 12 பெண்களுக்கு தலா ரூ. 3,465 மதிப்பில் தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மொத்தம் ரூ.62,500-க்கான காசோலை,

    சட்டப் படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப் புத்தகம் வாங்க உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ஒரு நபருக்கு ரூ. 3,000-க்கான காசோலை தவிர ஒருவருக்கு ரூ. 25,000 திருமண நிதியுதவி காசோலை மற்றும் 4 கிராம் தங்கம், 4 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.4,500 மதிப்பிலான செயற்கை கால்கள், 19 பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நாகையில்...

     நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், பயனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆட்சியர் து. முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதி மூலம் திருக்குவளையைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் 6 பேருக்கு தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஒருவருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு ஊன்றுகோல் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். மேலும், கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ. 12 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 115 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 8 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் மதியழகன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க. ஜெகதீசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகதாஸ் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai