சுடச்சுட

  

  திருவாரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

  By dn  |   Published on : 11th June 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூரில் திங்கள்கிழமை மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

  தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பிற கட்டடங்களில் வரும் 30-ம் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  இதன்படி, திருவாரூரில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை பழைய ரயில் நிலையத்திலிருந்து ஆட்சியர் எம். மதிவாணன் தொடங்கி வைத்தார்.

  பேரணியில் திருவாரூர் மோசஸ் நடுநிலைப் பள்ளி, பாத்திமா நடுநிலைப் பள்ளி, சைவப் பிரகாசா நடுநிலைப் பள்ளி, எஸ்.எஸ்.நடுநிலைப் பள்ளி, ராமன் நடுநிலைப் பள்ளி, விஜயபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, தண்டலை ஊரட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேரணியில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை எழுப்பியபடி மாணவர்கள் சென்றனர்.

  மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், கோட்டாட்சியர் பெ. பரமசிவம், நகராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், திருவாரூர் ஒன்றியக் குழுத் தலைவர் மலர் மணிகண்டன், நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai