சுடச்சுட

  

  மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் கைது

  By dn  |   Published on : 11th June 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்ட கணவர் உள்பட 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  மன்னார்குடி புதிய புறவழிச் சாலையை சேர்ந்த ஜெயவீரபாண்டியன் மகன் வெங்கடேசன் (33). ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவருக்கும், திருத்துறைப்பூண்டி அகரமனைக்காலைச் சேர்ந்த கோபி மகள் வேணி (32) என்பவருக்கும் கடந்த 2010-ல் திருணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டுக்கும் மேலாக குழந்தை இல்லையாம்.

  இதனால், வேணியிடம் அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் குடும்பத்தினர் தகாத வார்த்தைகள் பேசி வந்தனராம். இதனால், வேணி திருத்துறைப்பூண்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

  இந்நிலையில், கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி, வேணியை அவரது பெற்றோர் 2013-ல் மன்னார்குடிக்கு அழைத்துவந்த போது, வெங்கடேசனுக்கும், அவரது உறவினர் ஜயராமன் மகள் சூரியாவுக்கும் (30) திருமணம் நடைபெற்றிருப்பது தெரியவந்ததாம்.

  இதுகுறித்து வெங்கடேசனிடம் வேணி கேட்டபோது, பதில் அளிக்காது வெங்கடேசனும், அவரது குடும்பத்தினரும் தகராறு செய்து விரட்டிவிட்டனராம். 

  இதுகுறித்து வேணி மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், வெங்கடேசனின் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்ததாம்.

  இதையடுத்து, தாங்கள் அளித்த புகாரின் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேணி திங்கள்கிழமை மனு அளித்தார்.

  இதைத்தொடர்ந்து, மகளிர் போலீஸார் வெங்கடேசன், அவரது தந்தை ஜெயவீரபாண்டியன் (64), தாய் தமிழரசி (55), சகோதரி சாரதா (30) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  மேலும், வெங்கடேசனின் 2-வது திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 2-வது மனைவி சூரியா, அவரது தந்தை ஜயராமன், தாய் மாலதி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai