சுடச்சுட

    

    மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு: மயிலாடுதுறையில் பேரணி, ஆர்ப்பாட்டம்

    By dn  |   Published on : 11th June 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பிற்கான மக்கள் இயக்கம் சார்பில் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேரணி, ஆர்ப்பாட்டத்துக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பிற்கான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் செயலருமான மா. ஈழவளவன் தலைமை வகித்தார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர்கள்  உமாகாந்தன், பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை காவிரி நகர் மேம்பாலம் அருகே பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன் நிறைவடைந்தது.

    அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். காவிரி டெல்டா பகுதியை விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் அமையவுள்ள அனல்மின் நிலையங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    சிபிஐ-எம்எல் (மக்கள் விடுதலை) நாகை மாவட்டச் செயலாளர் அரங்க. குணசேகரன், முன்னாள் எம்எல்ஏ ஜெக.வீரபாண்டியன், மீத்தேன் திட்ட எதிர்ப்பிற்கான மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி மு. ஸ்டாலின், ஊராட்சித் தலைவர்கள் ராஜ்குமார் (நெப்பத்தூர்), செங்குட்டுவன் (மருதம்பள்ளம்)உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், மயிலாடுதுறை வட்டாட்சியரிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்பிற்கான மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai