Enable Javscript for better performance
காரைக்கால் சித்திகாளியம்மன் கோயில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் சித்திகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

    By காரைக்கால்,  |   Published on : 12th June 2014 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சித்திகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

    காரைக்கால் அருகே உள்ள பச்சூர் கிராமத்தின் நூலாற்றங்கரையில் உள்ள ஸ்ரீ சித்திகாளியம்மன் கோயில் ராஜகோபுரம், விமானம், மகா மண்டபத்துடன் புதிதாக புனரமைக்கப்பட்டது. இக்கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது.

    முன்னதாக திங்கள்கிழமை மாலை முதல் கால யாக பூஜை தொடங்கின. புதன்கிழமை 4-ம் கால பூஜையில் மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடத்தப்பட்டு, சிவாச்சாரியார்கள் கடங்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், காரைக்கால் நகரமைப்பு குழுமத் தலைவர் கே. கோவிந்தராஜ் உள்பட ஏராளமானனோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai