Enable Javscript for better performance
ஜூன் 14-ல் பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜூன் 14-ல் பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம்

    By திருவாரூர்  |   Published on : 12th June 2014 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 14-ம் தேதி நியாய விலைக் கடை குறைதீர் கூட்டம் நடைபெறும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    திருவாரூர் தாலுகா மாங்குடியில் திருவாரூர் கோட்டாட்சியர், நன்னிலம் வாழ்க்கையில் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், குடவாசல் கமுகக்குடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர், வலங்கைமான் ஆலங்குடியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்.

    நீடாமங்கலம் மேலாளவந்தச்சேரியில் மாவட்ட வழங்கல் அலுவலர், மன்னார்குடி செருகளத்தூரில் மன்னார்குடி கோட்டாட்சியர் திருத்துறைப்பூண்டி கீராலாத்தூரில் மன்னார்குடி கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ஆகியோர் தலைமையில் நியாயவிலைக் கடை குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொதுவிநியோகத்திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடைமாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்த தங்களது கோரிக்கை மனுக்களை கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai