சுடச்சுட

  

  ஜூன் 21-ல் திருப்பாம்புரம் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி

  By திருவாரூர்  |   Published on : 13th June 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் ராகு, கேது கோயிலில் ஜூன் 21-ம் தேதி ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திரும்பாம்புரத்தில் பழமையான சேஷபுரீஸ்வரர் ராகு, கேது கோயில் உள்ளது. 274 தேவாரப் பாடல் பெற்ற தொன்மையான கோயிலாக விளங்கும் இக்கோயிலில் வழிபட்டால், திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம் மற்றும் காளகஸ்தியில் வழிபட்டதாக ஐதீகம். ஜூன் 21-ம் தேதி முற்பகல் 11.12 மணிக்கு ராகு பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும், கேது பகவான் மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்கும் இடம் பெயருகின்றனர். முன்னதாக விழாவையொட்டி, ஜூன் 20 முதல் 22-ம் தேதி சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெறவுள்ளது.

  ஜூன் 21-ம் தேதி காலை 7 மணிக்கு பூஜைகள் தொடங்கி, சிறப்பு யாகம், மகா பூர்ணாஹூதி, மகா பால் அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஜூன் 22-ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

  விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai