சுடச்சுட

    

    திண்டுக்கல் லியோனிக்கு நிபந்தனை ஜாமீன்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 13th June 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட வழக்கில் திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனிக்கு திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கச்சனம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி முன் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக திண்டுக்கல் ஐ. லியோனி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய திமுக செயலர் அன்பரசன் ஆகியோர் மீது திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை திருத்துறைப்பூண்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் ஐ. லியோனி ஆஜராகாததால் அவருக்கு கடந்த 4-ம் தேதி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற லியோனி, வியாழக்கிழமை திருத்துறைப்பூண்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜராகி இரு நபர் ஜாமீன் மற்றும் ரூ. 10,000 ரொக்க ஜாமீன் பெற்றார்.

    ஒவ்வொரு திங்கள்கிழமையும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜராகி லியோனி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை நீதித்துறை நடுவர் கே.எஸ். சிவா வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai