Enable Javscript for better performance
திருவாரூரில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

    By திருவாரூர்,  |   Published on : 13th June 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் வியாழக்கிழமை மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய வருவாய்த் துறையினர் தங்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய அனைத்து நிலை வருவாய்த் துறை ஊழியர்களுக்கு 2 மாத கால அடிப்படை ஊதியம், பறக்கும்படை நிலை கண்காணிப்புக் குழுக்கள் விடியோ கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு ஒரு மாத கால அடிப்படை ஊதியம் வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு எவ்விதப் பயனும் இல்லை.

    எனவே, தேர்தல் பிரிவில் பணியாற்றும் அனைத்து நிலை தாற்காலிக ஊழியர்களின் பணியை நிரந்தம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    தேர்தலில் பணியாற்றிய வருவாய்த் துறை ஊழியர்கள் மற்றும் பிறதுறை ஊழியர்களுக்கும் மேற்கண்ட ஊதியத்தினை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார்.

    இதேபோல், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai