சுடச்சுட

    

    மதுபானக் கடையை அகற்ற கோரி முற்றுகைப் போராட்டம்

    By திருவாரூர்,  |   Published on : 14th June 2014 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடவாசல் அருகே சேங்கனூரில் வெள்ளிக்கிழமை மதுபானக் கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம் - நன்னிலம் சாலையில் உள்ள சேங்கனூர் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென்று பொதுமக்கள் சார்பில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்துக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    இந்நிலையில், சேங்கனூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை மதுபானக் கடையை முற்றுகையிட்டு கடையை திறக்கவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் டிஎஸ்பி மதுரசாமி, டாஸ்மாக் மண்டல மேலா ளர் வசுந்தராதேவி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது கடை ஒரு வாரத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அரசு அலுவலர்களின் உத்தரவாதம் அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai