சுடச்சுட

  

  இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தவறிவிழுந்து சாவு

  By திருவாரூர்,  |   Published on : 15th June 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெள்ளிக்கிழமை தவறிவிழுந்து உயிரிழந்தார்.

  திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் திருவிக நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சுரேஷ் (29). கொத்தனார். இவர் வெள்ளிக்கிழமை இரவு கட்டடப் பணியை முடித்துவிட்டு தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். குளத்தின் வடகரை இடிந்து விழுந்து மண் சாலையில் கொட்டப்பட்டு மேடாக உள்ளது. அந்த வழியாக இரு சென்ற சுரேஷ் எதிர்பாராதவிதமாக மண் திட்டில் மோதி தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவ்வழியே சென்றவர்கள் சுரேஷை மீட்டு, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். திருவாரூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai