சுடச்சுட

  

  திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான ஆழித்தேர் திருப்பணியை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழமை பார்வையிட்டார்.

  புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு ஆழித்தேர் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டு 2.8.2010 அன்று தேர் பிரிக்கும் பணி தொடங்கியது.

  தேர் முற்றிலும் பிரிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திருப்பணிகள் தொடங்கவில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஆழித்தேர் புதுப்பிக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

  இதனால், பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் ஆழித்தேரை விரைவில் உருவாக்க வேண்டும்,

  திருவாரூரில் ஆழித்தேரோட்டம் நடத்த வேண்டுமென்று பல்வேறு நிலைகளில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

  இதைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையால் கடந்த ஓராண்டுக்கு முன்பு தேர்த் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

  ஆனால், தேருக்கான தகுதியற்ற மரங்கள் வாங்கப்பட்டு அதனால் தேரின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டது.

  தற்போது, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வளப்பக்குடியில் (நடுப்படுகை) தேக்கு மரங்கள் வாங்கப்பட்டு, தேர்த் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

  தேரடி கூடத்தில் தேரின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  இந்தப் பணிகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. கோபால், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai