Enable Javscript for better performance
\\\"காரைக்காலில் ஏரிகள் அமைப்பதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    "காரைக்காலில் ஏரிகள் அமைப்பதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    By 'காரைக்கால்,  |   Published on : 16th June 2014 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் தண்ணீரை தேக்கிவைக்கக் கூடிய ஏரிகள் அமைப்பதற்கு புதுச்சேரி அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

    ஒவ்வொரு ஆண்டும் குறுவை, சம்பாவுக்குத் தேவையான காவிரித் தண்ணீரை எதிர்நோக்கும் நிலை தமிழகத்திற்கும், புதுவைக்கும் இருந்து வருகிறது.

    இப்போது காவிரித் தண்ணீர் திறந்துவிடும் பிரச்னையை மூடிமறைக்கும் விதமாக காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னையை கர்நாடகம் கையில் எடுத்துள்ளது. புதுவை மாநிலம் காரைக்காலுக்கு ஆண்டுதோறும் 7 டி.எம்.சி. தண்ணீர் தேவையிருக்கிறது. புதுவை அரசு இதுவரை குறுவை, சம்பாவுக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு மத்திய அரசையும், கர்நாடக, தமிழக அரசுகளையும் வலியுறுத்தவில்லை.

    கர்நாடகம் தனது எல்லா அணைகள், குளம், வாய்க்கால், குட்டைகளில் காவிரித் தண்ணீரை தேக்கிவைத்துவிட்டு எஞ்சியிருந்தால் தமிழகத்திற்கு திறந்துவிட அந்த மாநிலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மீறி தமிழகத்திற்கு வந்தால்கூட காரைக்காலுக்கு (புதுவை) உரிய தண்ணீரை தமிழக அரசு வழங்காது.

    இந்த நிலையில், காரைக்காலில் விவசாயத்தை காக்க வேண்டுமெனில் வெட்டப்பட்டுவரும் நல்லம்பல் ஏரி பணியை துரிதமாக முடிக்க வேண்டும். புதுவை அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள காரைக்கால் பகுதியில் அம்பகரத்தூர், பண்டாரவாடை, தேனூர், புத்தக்குடி, அக்கரைவட்டம் பகுதியில் புதிதாக ஏரிகள் அமைக்க வேண்டும். இதன்மூலம் மழை, வெள்ள காலங்களில் தண்ணீரை தேக்கிவைத்து பயன்பெற முடியும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai