சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளோருக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் இலவச பயிற்சியளிக்கப்படுகிறது.

  இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) திருஞானசம்பந்தம்

  வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் மையத்தின் மூலம் திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

  பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதார நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai