சுடச்சுட

    

    திருநள்ளாறு கோயிலில் 2 நாட்களாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    By காரைக்கால்,  |   Published on : 16th June 2014 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் அதிகளவில் திரண்டனர்.

    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரனை தரிசிக்க வாரம்தோறும் சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களில் பெரும்பாலானவர்கள் திருநள்ளாறில் ஸ்ரீ சனீஸ்வரனை வழிபட வருகை தந்தனர்.

    இதனால் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் திருநள்ளாற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை திருநள்ளாறு கோயிலுக்கு பெருமளவு பக்தர்கள் வருகை இருக்காது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.

    முன்னதாக பதிவு செய்திருந்தபடி காலை 9.30 மணியளவில் தொடங்கும் ஸ்ரீ சனீஸ்வரன் சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai