Enable Javscript for better performance
திருவாரூரில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி தலைமை வகித்தார் . பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக அரசு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும், சம்பவத்தில் தொடர்புடைய சமூக விரோதிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் பெண்கள், சிறுமிகள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க அரசு தனி கவனம் செலுத்தி சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்

    தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai