சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 10,727 பேர் பயனடைந்துள்ளனர்

    By திருவாரூர்  |   Published on : 16th June 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 10,727 பேருக்கு ரூ. 38.01 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்.

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை 1000 ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது:

    முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை மின் வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அனைத்து திட்டங்களையும் தீட்டி முழுமையாக நிறைவேற்றி வருகிறார்.

    காவிரியாற்றில் தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்தும் வகையில் சட்டப் போராட்டம் நடத்தி மத்திய அரசிதழில் நடுவர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பை

    வெளியிட்டு வெற்றி கண்டுள்ளார் முதல்வர் என்றார்.

    சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 2.57 கோடி, தலா 4 கிராம் வீதம் தங்கமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நாகை தொகுதி எம்.பி. கே. கோபால், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், நகராட்சித் தலைவர்கள் ரவிச்சந்திரன் (திருவாரூர்) சுதா அன்புச்செல்வன் (மன்னார்குடி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai