சுடச்சுட

  

  தூய சகாய அன்னை ஆலயத்தில் புனித அந்தோணியார் திருவுருவம் திறப்பு

  By காரைக்கால்,  |   Published on : 16th June 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலய வளாகத்தில் புனித அந்தோணியார் திருவுருவத்தை மறை மாநில பேராயர் சனிக்கிழமை திறந்துவைத்தார்.

  காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் புதிதாக புனித அந்தோணியார் திருவுருவம் கொண்ட மண்டபம் அமைக்கப்பட்டு திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை, கடலூர் உயர்மறை மாநில பேராயர் அந்தோணி ஆனந்தராயர் திருவுருவத்தை திறந்துவைத்தார்.

  தொடர்ந்து ஆலயத்தில் தூய சகாய அன்னை மறைபணி கூடத்தையும் திறந்துவைத்தார். "கோடி அற்புதர்' என்று அழைக்கப்படும் பதுவா நகர் புனித அந்தோணியார் உலக மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் என அந்தோணியார் குறித்து விளக்கவுரை அளித்தார் ஆனந்தராயர்.

  நிகழ்ச்சியில் சமாதானக் குழு உறுப்பினர்கள், பங்குப் பேரவை உறுப்பினர்கள், அருள்சகோதரிகள், சலேசிய குருக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai