சுடச்சுட

  

  பூட்டி கிடந்த உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆய்வு

  By திருவாரூர்  |   Published on : 16th June 2014 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு பூட்டி கிடந்த உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

  இந்த உள்விளையாட்டு அரங்கத்தில் எஞ்சியுள்ள பணிகளை முடித்து, அரங்கை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. அரங்கில் மின் வயர்கள் பொருத்தும் பணி மற்றும் சிறுபணிகள் நடைபெற வேண்டியிருந்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டு அரங்கம் மூடியே கிடக்கிறது. இதனால் விளையாட்டு அரங்கைச் சுற்றி முள்முதர்கள் மண்டி செடி, கொடிகள் படந்து காணப்பட்டன. இந்நிலையில், இந்த உள்விளையாட்டு அரங்ககை சீரமைக்கும் முயற்சியாக சனிக்கிழமை அமைச்சர் ஆர். காமராஜ், நாகைத் தொகுதி எம்.பி. கே. கோபால், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன் உள்ளிட்டோர் விளையாட்டு அரங்கத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அரங்கை விரைவில் வீரர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் மேற்கொள்ள அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

  ஆய்வின்போது, கோட்டாட்சியர் பெ. பரமசிவம், துணை ஆட்சியர் பயிற்சி, ராஜராஜன், எஸ். ஜானகி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டடம்) ரத்தினவேல், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai